வாஸ்து பூஜை முறை

பிரபலவாஸ்துநிபுணர் – எஸ்.ராமசிவநேசன்

மொத்த இடத்தின் ஈசான்ய மூலையில் தோண்டப்பட்ட குழிக்குள் ஒன்பது செங்கலை எடுத்து மூன்று வரிசையாக ஒரு வரிசைக்கு மூன்றுகல் வைக்க வேண்டும். குழியில் கிழக்கு ஒட்டி அடுக்க வேண்டும். அப்பொழுது தான் மேற்குப்புறத்தில் நின்று கொண்டு கிழிக்குப் பார்த்து பூஜை செய்ய முடியும்.

1.ஒன்பது கல்லையும் ஒன்பது கிரகங்களாக பாவித்து நிறை குடத்துநீரைக் கொண்டு வீட்டிலுள்ள பெண்கள் நனைக்க வேண்டும்.

2. சந்தனம், குங்கும்ம் வைத்து அதன்மீது தனித்தனியே நவதான்யங்களை எடுத்து வைக்க வேண்டும். தீப, தூபம் காட்டி வணங்க வேண்டும்.

3. குழியின் தென்மேற்கு மூலையில் தோல் உரித்த வேப்பங்குச்சியை மண்ணை மேடாக்கி ஊன்றி அதில் ஒன்பது தான்யங்களையும் சேர்த்து கட்டிய மஞ்சள் துணியை கட்ட வேண்டும் தீப, தூபம் காட்ட வேண்டும்.

வீட்டிற்கு உரிமையாளர்கள் நவதான்யங்களை படத்தில் குறிப்பிட்ட இடத்தில் மனை எல்லையிலும், மத்தியிலும் போட்டு வணங்கி ஆவாகரணம் செய்ய வேண்டும். 5. வாஸ்து நேரம் முடிந்தபின் தானம் செய்யலாம்.

(எண்ணுக்குரிய கிரகமும் தான்யமும் முன்பக்கத்தில் உள்ளபடி படையலும், ஆவாகரணமும் செய்யுவும்)