தொழிற்சாலையின் படம் அனுப்பினால் நீங்கள் மாற்றங்களை சொல்லி அனுப்புவீர்களா?

மங்கை நவம்பர் 1997
பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன்

தொழிற்சாலை ஆனாலும் , வீடுகள், ஆனாலும் நாங்கள் நேரடியாக வந்து பார்த்து தான் மாற்றங்களை கூற முடியும். இடத்தைப்பார்க்காமல் கூறுவது சரியாக இருக்காது. வாஸ்து சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமானது திசைகள். இந்தத் திசைகளை பொறுத்தவரை ‘மேக்னடிக்காம்பஸ்’ வைத்துப்பார்க்க வேண்டும். பார்க்காமல் திசைகளை தீர்மானிக்க முடியாது. மேற்கு என்று சொல்வார்கள். நேரில் போய் அளந்து பார்த்தால் அது வடமேற்காகவோ, தென்மேற்காகவோ இருக்கும். சுற்றுப்புறங்களின் தாக்கம் ஸ்தான பலத்தைக் கூட்டும். அதையும் அலசி ஆராய்ந்த பிறகே உள்ளே சென்று என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூற முடியும். தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு தொழிலாளர் பிரச்சனை வருவதற்கு வாஸ்து சரியாக அமையாததே காரணமாக இருக்கும். இப்படி சிக்கல்கள் வந்த பல தொழிற்சாலை வாஸ்துக்களை நான் மாற்றிக்கொடுத்து தற்போது லாபகரமாக சிறப்பாக இயங்கி வருகிறது. புதிதாக துவக்கப்படும் தொழிற்சாலைகள் நன்கு லாபத்துடன் இயங்க வாஸ்து அமைத்து தந்து வருகிறேன்.