வாஸ்து சாத்திரப்படி நமது வீடும், நாடும்

தினகரன் தீபாவளி மலர் – 1998
பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன்

வாஸ்து சாஸ்திரம் என்பது பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றை அடிப்படையாகக் கொண்ட அறிவியலாகும். இன்று தொலைக்காட்சி பத்திரிக்கைகளில் வாஸ்து பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளதால் இதைப்பற்றி அறியாதவர் யாரும் இல்லை எனும் அளவிற்கு மக்களிடம் வாஸ்து சாஸ்திர ஞானம் வளர்;ச்சி அடைந்துள்ளது. நடைமுறையில் வாஸ்து வக்ரமுள்ள வீடுகளில் வாழ்ந்தவர் நலிவடைவதும் வாஸ்து பலமுள்ள இடத்தில் வாழ்பவர் தொழில் புரிந்தவர் வளர்ச்சியடைவதும் கண்கூடாக பார்க்கிறோம். அதிக அளவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவு மற்றும் நோய் வரும் தெற்கு,தென்கிழக்கு செப்டிக் டாங்க் பள்ளம் இருக்கும் மனையிலுள்ளோர் ஆஸ்பத்திரி செலவுகளாலும,;வீண் செலவுகளாலும் கடனாளி ஆகிவிடுவர்.
மைக்கேல் ஜாக்சன் முதல் நம்மூர் நடிகர், நடிகைகள் வரையும் உள்ளுர் அரசியல் அலுவலகம் முதல் வெள்ளை மாளிகை வரையிலும் வாஸ்து சாத்திரத்தை கடைபிடித்த செய்திகளை படிக்கிறோம. இந்த வாஸ்து சாத்திரம் வீட்டையும்,நாட்டையும் ஆளுமை செய்கிறது.
குழந்தைசெல்வம்: செல்வங்களிலும், சிறந்தது குழந்தைசெல்வம் என்பர். இத்தகைய குழந்தைகள் பெற்றெடுக்க மருத்துவர்களை நாடி பின்னர் காசி, ராமேஸ்வரம் என அலைபவர்கள் பலருண்டு. இவர்களின் வீடுகளை ஆராய்ந்தால் கிழக்கு திசை மூடம், கிழக்கு, வடகிழக்கு திசைகுறைவு போன்ற வாஸ்து தோஷங்கள் இருக்கும். அதே நேரத்தில் இத்திசை வளர்ச்சி, திறவை இருந்தால் அதிக குழந்தைகள் இருக்கும்.
நமது நாடான இந்தியாவிற்கு வடக்கே அதிக உயரமான இமயமலையும், தெற்கே பள்ளமாக உள்ள இந்து மகா சமுத்திரம் உள்ள இந்த வாஸ்து அமைப்பு தான் திட்டங்களையும் உழைப்பையும் மீறி கடன்காரரையும் உலக நாடுகளிடம் கையேந்தும் நிலையை உருவாக்கி உள்ளது. நாடுகளிலேயே அதிக மக்கள் தொகையுடைய நமது நாடான இந்தியாவும், அண்டை நாடான சீனாவும் கிழக்கு, வடகிழக்கு திசை வளர்ச்சியடைய அமைப்பில் உள்ளது. குறிப்பிடத்தக்கதாகும்.

வரவு எட்டணா செலவு பத்தணா
நாட்டுக்கும், வீட்டுக்கும் வரவு திட்டம்ம மிக முக்கியமானது ஆகும். ஆனால் வரவையும், செலவையும் கூட நிர்ணயிப்பது வாஸ்து சாஸ்திரத்தின் நிறை குறைகள் தான். என்பதை பலர் உணர்வதில்லை. வீடுகளை கட்டும்போது தொழிற்சாலைகளை அமைக்கும் போது வடக்கு எல்லைவரை கட்டிடத்தை கட்டி தெற்குப்பக்கம் அதிக காலி இடம் விடுவது வாஸ்து வக்ரமாகும். வீட்டின் மேற்படி அமைப்பிலும் வடக்குப்பக்கம் உயரமாக பெண்ட் ஹவுஸ் தண்ணீர் தொட்டி அறைகளைக்கட்டி தெற்குப்பக்கம் மட்டமாகவும் அமைப்புகளுள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு வரவை விட செலவு அதிகமான அளவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குவரும்.
வழக்கு விவகாரம் வாயுமூலை வீட்டின் உரிமையாளரை திவானாக்கவும், திவாலாக்கவும் சக்தி பெற்றது. இந்த குறையுள்ள வீடுகள் ஏலம் போவதும், விற்பனையாவதும் சர்வ சாதாரணம். வடமேற்கு 90டிகிரி மைனஸ் ஆக உள்ள வீடுகளிலும வடக்கு சார்ந்த வடமேற்கு வளர்ந்த வீடுகளிலும் மற்றும் வாயு வியதோஷம் உள்ள வீடுகளிலும் வசிப்பவர்களுக்கே தேவையில்லாத வம்புகளும் வழக்குகளும் வந்து சேரும். கல்வியும், செல்வமும் அழகும் உள்ள ஆண், பெண்களுக்குக் கூட திருமணம் தாமதப்படும் கடைசி நிமிடத்தில் தடைபடும்.
நமது நாட்டின் வடக்கு சார்ந்த வடமேற்கு வளர்;ச்சி பகுதியான காஷ்மீர் வழக்கு விவகாரங்களுடன் காணப்படுகிறது. தீராப்பிரச்சனையாக உள்ள இத்தகைய வாயவியதோஷமனைகள் வாஸ்து முறைப்படி திருந்தினால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் தடைபட்டிருப்பவர்களுக்கு உடனே திருமணம் நடைபெறும்.
பெண்களுக்குக் கேடு குடியிருக்கும் வீட்டிற்கு கிழக்கு சார்புதென் கிழக்கில் இடம் வாங்கிச்சேர்த்து ஏற்கெனவே உள்ள மனையை சேர்த்துக்கட்டினாலோ வாயுவியம் வளர்ந்துள்ள மனையில் கிழக்கு சார்பு தென்கிழக்கில் வாசல் வைத்தாலோ, தென்கிழக்கில் தனியே உள்ள கட்டிய அறையை சமைலறையாக உபயோகித்து நடந்து செல்வதோ ஆக்கினேய நடை எனப்படும். இத்தகைய ஆக்கினேய நடையுள்ள வீடுகளில்தான் விபத்துக்களும், திருட்டுக்ளும், அவப்பெயரும், நோய்களும், வீண்கலகமும் ஏற்படும்.
வரலாற்றைப்பார்த்தால் தனது நாட்டிற்கு ஆக்கினேயத்தை ஆக்கிரமித்ததவர்கள் ஆக்கினேயமாக படையெடுத்துச் சென்றவர் வெற்றியுடன் திரும்பியதில்லை. நாம் இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பியது. ஆக்கினேய நடையாகத் தான் இதன் தொடர்ச்சியாக ஒருதலைவரை இழக்க நேரிட்டது. சதாம் உசேன் குவைத்தை ஆக்ரமித்தது. தன் நாட்டிற்கு ஆக்கினேயத்தில்தானே.
இயேசு பிறந்த இடம் வீடுகளில் கிழக்குப்புறம் பம்ப் கிணறு பள்ளங்கள் இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மனோபலம் மிகும். எந்தக் காரியத்தையும் செய்யக்கூடிய வல்லமை பெறுவர். அதே நேரத்தில் கிழக்கிற்கு எதிர் திசையான மேற்கில் கிணறு பள்ளங்கள் உள்ள வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் உள்ளவர்கள் நாளுக்கு நாள் சிந்தனை ஆற்றல் மனோபலம் குறைந்து நிர்வாகத்திறன் குறையும் எத்தனையோ திறமைசாலிகள் சில அலுவலகங்களுக்கு மாற்றலாகி வந்தவுடன் செல்லாக்காசுகளாக ஆகி விடும் நிலை ஏற்படுவதற்கு இது போன்ற சில வாஸ்து தோஸங்கள் காரணமாகின்றன.

செல்வம் கொழிக்கும்அமைப்பு
வீடுகள் மட்டுமன்றி ஆலயங்களுக்கும் வாஸ்து பலம் அவசியம். ஆலயங்களுக்கு வாஸ்து தேவையா? என சிலர் எதிர்வினா எழுப்புவதுண்டு, அனுபவத்தில் பார்த்தால் வாஸ்து பலமுள்ள கோவில்களே மக்களை கவர்ந்து வருமானத்துடன் வளர்ச்சி பெறுகிறது. வாஸ்து வக்ரமுள்ள பல கோவில்கள் பூஜையின்றி பக்தர்கள் ஆதரவின்றி மூடிக்கிடக்கின்றது.
திருத்தலங்களில் வருமானத்தில் உலக அளவில் இரண்டாவது இடத்தை வகிக்கும் திருப்பதி வாஸ்து பலமுள்ள அற்புத இடமாகும். தெற்கு, மேற்கு உயர்ந்த மலைகள், வடகிழக்கில் பள்ளமும், அங்கே புஷ்கரணி என்ற நீர்நலை குளமும் உள்ளது. உலக அளவில் வருமானத்தில் முதல் இடத்தை பெற்றுள்ள திருத்தலம் போப் ஆண்டவர் உள்ள வாடிகன் சிட்டி முழுவதும் உள்ள பக்தர்களின் காணிக்கை பணம் குவிகிறது. இந்த இடமும் அற்புத வாஸ்து பலமுள்ள இடமாகும். வடகிழக்கு நீண்டு அடுக்கடுக்காக பள்ளமாக போகிறது. கிழக்கு வெளிவளம் தருகிறது.
வீடுகளிலும் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு பள்ளமான அமைப்புடைய வீடுகளில் வசிப்போருக்கு பணம் சம்பாதிப்பது செல்வம் சேர்ப்பது எளிதில் கை கூடிவரும்.
தாம் வசிக்கும் இல்லம் கூரையானாலும், கோட்டை ஆனாலும் வாஸ்து சாத்திரப்படி அமைத்தால வாழ்க்கையில் அமைதியும் அனைத்து வளங்களையும் பெற்று சுகமாக ;வாழலாம். வாஸ்து சாஸ்திரப்படி தங்களது இல்லங்களையும் தொழிற்சாலைகளையும் மாற்றம் செய்து வளம் பெறலாம்.

2 thoughts on “வாஸ்து சாத்திரப்படி நமது வீடும், நாடும்

  • வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசித்து வேலை செய்பவர்கள் வாஸ்து பார்க்க வேண்டுமா? வாடகை வீட்டில் குடியிருந்தால் என்ன செய்வது அய்யா

  • வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசித்து வேலை செய்பவர்கள் வாஸ்து பார்க்க வேண்டுமா? வாடகை வீட்டில் குடியிருந்தால் என்ன செய்வது அய்யா. குழந்தையில்லை இதுவரை. தமிழகத்தில் உள்ள கணவர் வீட்டில் காம்பவுண்ட் சுவர் ஒட்டி தென் கிழக்கு மூலையில் கழிவரையும் அதை ஒட்டி குளியலரையும் அமைந்துள்ளது

  • Leave a Reply

    Your email address will not be published.