வாழவைக்கும் வாஸ்து

அமுதசுரபி ஜுலை 99
பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன்

இப்போது மக்களிடம், நியூமராலஜியும், வாஸ்துவும் அதிக விழப்புணர்ச்சி தந்து வருகிறது.  குழந்தைகளுக்கு நியூமராலஜி முறைப்படி பெயர் வைப்பது மிக முக்கியம்.  நல்ல அதிர்ஷ்டப் பெயரே குழந்தை சீரும்,சிறப்புமாய் வாழ உதவுகிறது.  ஆணோ, பெண்ணோ எந்த வயதிலும் தங்கள் பெயரை நியூமராலஜிப்படி மாற்றி அமைத்து வெற்றி காணலாம்.  வாழ்வில் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் உள்ள பல ஆண்கள், பெண்கள் என்னிடம் ஆலோசனை பெற்று புதுப்பெயரோ அல்லது பெயரில் சிறு மாற்றமோ செய்து கொண்டு புத்துணர்ச்சியான, செல்வமிக்க சந்தோஷ வாழ்வு பெற்றுள்ளனர்.  எதிர்பாராத முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர். நாற்பத வருட அனுபவம் பெற்ற தந்தையிடம் நியூமராலஜி – வாஸ்து கற்ற இந்த இளைஞர் எஸ்.ராமசிவநேசன் கடந்த ஐந்தாண்டுகளாக குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமான பெயரை ஆராய்ந்து அளித்தல், தொழிற்சாலைகளுக்கு வெற்றிகரமான, லாபகரமான பெயரை அமைத்துத் தருதல், பெயரைத் திருத்தி, சோதனைகளை அகற்றி தனி மனிதர்களை சாதனையாளர் ஆக்குதல் போன்ற நியூமராலஜி முறைகளையும், புதிய வீடுகள் கட்ட வாஸ்து சாஸ்திர முறைப்படி பிளான் போட்டுத் தருதல், தொழிற்சாலை வாஸ்து குறைகளை அகற்றி பரிபூரண சந்தோஷம் கிடைக்க வைத்தல்.  புpரமாதமான முன்னேற்றம் தரும் பிளாட்களைத் தேர்ந்தெடுத்து தருதல் போன்ற வாஸ்து முறைகளையும் கையாண்டு இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டவரின் பாராட்டுகளுடன் செயல்பட்டு வருகிறார். இச்சாதனையாளர் ‘அமுதசுரபி’ வாசகர்களுக்கு நியூமராலஜி – வாஸ்து மனித சமுதாயத்திற்கே இரண்டு கண்கள் போல எப்படி உதவி வருகிறது என்பதை இங்கே விளக்கமாகக் கூறுகிறார்.

தொழில் பெயரும் அவசியமான ஒன்று.  அது சிறப்பாக இருந்தால்தான் வியாபாரத்தில் அதிக லாபம் காண முடியும்.  பிராண்ட் பெயர் நல்ல வசியமுள்ள ஒலி அலைகள் அமைந்த பெயராக இருந்தால்தான் தொழில் சிறப்பாக அமையும்.
     ‘வாஸ்து சாஸ்திரப்படி’ஒருவர் குடியிருக்கும் வீடு, மனi நன்றாக இருக்கவேண்டும். அப்போது தான் அனைத்துச் செல்வங்களையும் பெற முடியும்.
     கல்வி, பொருளாதாரம், ஆரோக்கியம் ஆகிய எல்லாம் இல்லம் வாஸ்து முறைப்படி இருப்பதைப் பொறுத்தே அமையும்.
     நான் புது வீடுகளுக்கு நன்கு வாஸ்து முறைப்படி கட்ட ஆலோசனை வழங்குகிறேன்.  முதலில் இடத்தைப் போய் பார்த்து இடத்திற்கு தகுந்தபடி பிளான் போட்டுத்தருகிறேன்.  இரண்டாவதாக எந்த முறைப்படி கட்ட வேண்டும் என்று கூறுகிறேன்.  மூன்றாவதாக கிரில், எலிவேசன், கதவுகள் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.  நான்காவதாக வீட்டிற்கு முக்கியமான நிறங்கள் மற்றும் தரை அமைப்பு பற்றிச் சொல்கிறேன்.
     என் உதவியாளர்களுடன் ஆராய்ந்து இந்தப் பணியை மிகக் கவனமாக, நுணுக்கமாக செய்து தருகிறேன்.   உதாரணமாக  பெட்ரூமிற்கு எந்த வண்ணம் பயன்படுத்த வேண்டும்.  ஹாலுக்கு எந்த வண்ணம், கிச்சனுக்கு எந்த நிறம் என்றெல்லாம் சாஸ்திரம் இருக்கிறது.  அதன்படி வண்ணம் இருக்கும்படி செய்ய வேண்டும்.
தொழிற்சாலைகளுக்கு மிகுந்த கவனத்துடன் செய்து தருகிறேன்.  பெரும் முதலீடு செய்து தொழில் தொடங்கி பாதியிலேயே ஸ்தம்பித்து போய் வருகிறது. பலர் வேலை இழந்து தவிக்கிறார்கள். இந்த நிலைக்கு வந்த தொழிற்சாலைகளில் இருக்கும் வாஸ்து குறைகளை அகற்றி அதே தொழிற்சாலைகள் மிக வெற்றிகரமாக இயங்கும்படி செய்து வருகிறேன்.  விபத்துக்கள்,  வேலை நிறுத்தம், தொழில் முடக்கம், ஆகிய அனைத்தையும் வாஸ்து தவிர்த்து வருகிறது.

‘வாடகை வீட்டிற்கு வாஸ்து பார்த்துச் சொல்கிறேன்.  அங்கே இடிததுத தருகிறது.  Fungushui என்னும் சைனீஸ் வாஸ்து சாஸ்திரப்படி வாடகை வீடுகளில் பொருள்களை எங்கெங்கு எப்படி வைத்தால் நல்லது என்பதற்கு ஆலோசனை அளித்து வருகிறேன். பலர்பயன் பெற்றிருக்கிறார்கள். வாஸ்து தோஷங்களை அகற்றவும் நான் ஆலோசனை சொல்வதால் பிரச்சனைகள் தீர்த்து மகிழ்ச்சி பெறுகிறார்கள்.  மீன் தொட்டி கூட விசேஷ பலன் தருவதுண்டு.
     ஜாதகப்படி கெடுதலான பலன்கள் வந்தாலும் பெயரும், வீடும் நன்றாக இருந்தால், நியூமராலஜிப்படி பெயரும், வாஸ்து சாஸ்திரப்படி வீடும் இருந்தால் நிச்சயமாக பெரும் பாதிப்புகள் அடையாமல் தப்பி விட முடியும்.

சில வீடுகளில் நோய் மிகுந்த பாதிப்பு தந்ததை மாற்றி உள்ளேன்.  மனையில் கிழக்கு ஈசான்ய தோஷங்கள் இருந்தால் வம்ச விருத்தி இராது. அதாவது குழந்தை பிறக்காது.  அந்த தோஷங்களை நீக்கி, குழந்தை பிறக்கச் செய்து ஆத்ம திருப்தி அடைந்திருக்கிறேன்.
நியூமராலஜிப்படி – வாஸ்து கற்றுத் தந்தும் வருகிறேன்.  எனது மாணவர்கள் பலர் எனக்குப் பெருமை தரும்படி தொழில் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.