எனக்கு பிறந்த எண் ஒன்று, கூட்டு எண்.ஒன்று, பெயர் எண் ஒன்றில் எனக்கு நாற்பத்தி ஆறில் உள்ளது. எண் கணித ஜோதிடப்படி பொருத்தமானதா?

மங்கை நவம்பர் 1997
பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன்

எல்லோரும் பிறந்த தேதிக்கு கூட்டு எண்ணுக்கு பொருத்தமானதா இருந்தாலே நல்ல பெயர்னு நினைச்சுட்ட இருக்காங்க. அது சரியான அணுகுமுறை கிடையாது. எனக்குத் தெரிந்த ஒருவர் நியூமராலஜிப்படி பலபேரிடம் பெயர் மாற்றிக்கொண்டார். உங்களைப்போல் ஒன்று. ஒன்று கூட்டுஎண் கொண்டவர். அந்த ஒன்றில் அவர் வெற்றி அடையவில்லை. நான் ஐந்தில் அவருக்கு வைத்துத் தந்தேன். வெற்றிகரமான வாழ்க்கை நடத்தி வருகிறார். எனவே எண்களை மட்டும் பார்க்கக் கூடாது. ஒருவருக்கு பெயர் சூட்டும் போது சூரிய எண்கணித (ZODIAC & RIDGES) முறைப்படி கிரகத்தின் பலம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். கைரேகையையும், ஜாதகத்திலும் அலசி ஆராய்ந்து கிரக பலம் காண வேண்டும். இன்ஷியல் எவ்வளவு? பெயர் எவ்வளவு? என்ற அமைப்பும் சரியாக இருக்க வேண்டும். பெயரோட ஒலி அலைகள், நன்றாக இருக்கணும். ஒன்றில் பலம இருந்தால் ஒன்றில் வைக்க வேண்டும். அடுத்து ஒன்றில் யாருக்கு எந்தப் பகுதி எங்கு உள்ளது, ஒன்றிலேயே முப்பத்தி ஏழு பொருந்தாதவர்களுக்கு நான் நாற்பத்தி ஆறில் வைச்சு நல்லா இருக்காங்க. இதை எல்லாம் வைத்துதான் பெயர் அமைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.